சனி, 9 ஜனவரி, 2010
திங்கள், 14 டிசம்பர், 2009
சனி, 21 நவம்பர், 2009
மாவீரர் தின செய்தி
மானமுள்ள தமிழர்களே அழிகிறது தமிழ் ஈழம்
அழுகிறது தமிழ் இனம் என்று கண்ணீர் வடிப்பதை
நிறுத்துங்கள் இழந்த உயிர்களுக்கும் அழுத
கண்ணீருக்கும் விலையாக என்ன செய்ய போகின்றோம்
ஈழத்தின் விடிவுக்காய் உயிர்நீத்த எம்
மாவீரர்களுக்கு மகிமை படுத்த என்னசெய்ய போகின்றோம்
சற்று நினைத்து பாருங்கள் -எம் உறங்காத கண்மணிகள்
உறங்கி கொண்டிருக்கும் துயிலும் இல்லங்களில்
தூபம் ஏத்த முடியாத சூழல்
இப்படி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்
புலம் பெயர்ந்த உறவுகளே -மீளப் போகும்
தமிழ் ஈழத்தின் விடி வெள்ளிகளுக்கு
உங்கள் இல்லங்களில் தூபம் ஏற்றி
துயில் எழுப்புங்கள் -எம் மாவீரர் தினத்தையும்
புலிகளின் பலத்தையும் உலகம் அறியட்டும்
உலகத் தமிழரின் தாகம் -எப்போதுமே
தமிழ் ஈழ தாயகமாக அமையட்டும்
பிறவி
அழுகிறது தமிழ் இனம் என்று கண்ணீர் வடிப்பதை
நிறுத்துங்கள் இழந்த உயிர்களுக்கும் அழுத
கண்ணீருக்கும் விலையாக என்ன செய்ய போகின்றோம்
ஈழத்தின் விடிவுக்காய் உயிர்நீத்த எம்
மாவீரர்களுக்கு மகிமை படுத்த என்னசெய்ய போகின்றோம்
சற்று நினைத்து பாருங்கள் -எம் உறங்காத கண்மணிகள்
உறங்கி கொண்டிருக்கும் துயிலும் இல்லங்களில்
தூபம் ஏத்த முடியாத சூழல்
இப்படி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்
புலம் பெயர்ந்த உறவுகளே -மீளப் போகும்
தமிழ் ஈழத்தின் விடி வெள்ளிகளுக்கு
உங்கள் இல்லங்களில் தூபம் ஏற்றி
துயில் எழுப்புங்கள் -எம் மாவீரர் தினத்தையும்
புலிகளின் பலத்தையும் உலகம் அறியட்டும்
உலகத் தமிழரின் தாகம் -எப்போதுமே
தமிழ் ஈழ தாயகமாக அமையட்டும்
பிறவி
புதன், 4 நவம்பர், 2009
அண்டை நாடுகளே
அண்டை நாடுகளே
அண்டை நாடுகளே
அடிமையாய் வாழும்
தமிழருக்கு அடைக்கலம் கொடுங்கள்
சொந்த நாட்டில் -சோகமாய்
மடியும் அப்பாவி உயிர்களை
காக்க உதவுங்கள்
பாஸ்பரஸ் குண்டுகளால்
பற்றி எரியுது தமிழ் ஈழம்
எறிகணை வீச்சுக்களால்
சிதறிக்கிடக்குது தமிழன் உடல்கள்
ஐரோப்பா நாடுகளே
ஆசிய நாடுகளே
பேசிப்பலனில்லை யோசிக்கவும்
நேரமில்லை -எஞ்சியுள்ள
தமிழனுக்காவது கைகொடுங்கள்
பிறவி
அண்டை நாடுகளே
அடிமையாய் வாழும்
தமிழருக்கு அடைக்கலம் கொடுங்கள்
சொந்த நாட்டில் -சோகமாய்
மடியும் அப்பாவி உயிர்களை
காக்க உதவுங்கள்
பாஸ்பரஸ் குண்டுகளால்
பற்றி எரியுது தமிழ் ஈழம்
எறிகணை வீச்சுக்களால்
சிதறிக்கிடக்குது தமிழன் உடல்கள்
ஐரோப்பா நாடுகளே
ஆசிய நாடுகளே
பேசிப்பலனில்லை யோசிக்கவும்
நேரமில்லை -எஞ்சியுள்ள
தமிழனுக்காவது கைகொடுங்கள்
பிறவி
ஈழத்தில் பாரதி
ஓடித் திரியாதே பாப்பா-வெடி
குண்டு உன்னை துரத்திடும் பாப்பா
கூடி விளையாடதே பாப்பா
கொத்து குண்டு உன்னை
கொன்றிடும் பாப்பா
கொத்தித் திரியுது சிங்கள காகம்
நீ பதுங்கு குழிகளில்
பதுங்க பலகிக்கொள்ளு பாப்பா
பச்சை வயலெங்கும் பாப்பா
தமிழன் ரத்த சகதியடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
தமிழ் ஜாதிகள் அழியிதடி பாப்பா
சத்தம் போடாதே பாப்பா-ஈழம்
மீளும் மட்டும் நித்தம்
இதுதானடி பாப்பா
பிறவி
குண்டு உன்னை துரத்திடும் பாப்பா
கூடி விளையாடதே பாப்பா
கொத்து குண்டு உன்னை
கொன்றிடும் பாப்பா
கொத்தித் திரியுது சிங்கள காகம்
நீ பதுங்கு குழிகளில்
பதுங்க பலகிக்கொள்ளு பாப்பா
பச்சை வயலெங்கும் பாப்பா
தமிழன் ரத்த சகதியடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
தமிழ் ஜாதிகள் அழியிதடி பாப்பா
சத்தம் போடாதே பாப்பா-ஈழம்
மீளும் மட்டும் நித்தம்
இதுதானடி பாப்பா
பிறவி
இறைவா
குண்டு சத்தம் கேட்காத
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்
இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு
பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்
இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு
பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)