மானமுள்ள தமிழர்களே அழிகிறது தமிழ் ஈழம்
அழுகிறது தமிழ் இனம் என்று கண்ணீர் வடிப்பதை
நிறுத்துங்கள் இழந்த உயிர்களுக்கும் அழுத
கண்ணீருக்கும் விலையாக என்ன செய்ய போகின்றோம்
ஈழத்தின் விடிவுக்காய் உயிர்நீத்த எம்
மாவீரர்களுக்கு மகிமை படுத்த என்னசெய்ய போகின்றோம்
சற்று நினைத்து பாருங்கள் -எம் உறங்காத கண்மணிகள்
உறங்கி கொண்டிருக்கும் துயிலும் இல்லங்களில்
தூபம் ஏத்த முடியாத சூழல்
இப்படி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்
புலம் பெயர்ந்த உறவுகளே -மீளப் போகும்
தமிழ் ஈழத்தின் விடி வெள்ளிகளுக்கு
உங்கள் இல்லங்களில் தூபம் ஏற்றி
துயில் எழுப்புங்கள் -எம் மாவீரர் தினத்தையும்
புலிகளின் பலத்தையும் உலகம் அறியட்டும்
உலகத் தமிழரின் தாகம் -எப்போதுமே
தமிழ் ஈழ தாயகமாக அமையட்டும்
பிறவி
சனி, 21 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக