புதன், 4 நவம்பர், 2009

இறைவா

குண்டு சத்தம் கேட்காத
என் பழைய நகரம்
என் மேசையில் மரண அவலம்
எழுதப்படாத நாளேடுகள்

இரத்தக் கரைப்படியாத
மணல் பரப்பு
யுத்தத்தின் சுவடுகள்
தோன்றாத தனிமைகள்
அமைதியான பகல் பொழுது
நான் நிம்மதியாய் உறங்கிய
ஓர் இரவு

பிணவாடை கலக்காத
கொஞ்சம் காற்று
பிரிவையே சந்திக்காத
என் உறவுகள்
இன்னும் இன்னம் யுத்தமே
இல்லாத எல்லாம் வேண்டும்
எனக்கு தருவாயோ இறைவா ?
பிறவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக