புதன், 4 நவம்பர், 2009

ஓடிவிடுங்கள்

ஓடும் மேகங்களே -எங்கே
ஒழிந்து செல்கின்றீர்கள்
சலசலக்கும் நதிகளே -ஏனோ
சத்தமின்ரிக்கிடக்கின்றீர்கள்

பச்சை புல்வெளிகளே
சின்ன பனித் தூ ரல்களே
உச்சி ஆகாயமே -அதில்
வாழும் வண்ணத் தாரகைகளே
நீங்களும் ஏனோ
நிலை குலைந்து நிற்கின்றீர்கள் .......

ஈழத் தமிழனுக்குதான்
இந்த நிலை என்றால்
உங்களையும் விடவில்லையோ
அந்நியனின் பார்வையது

ஈழத்தின் இயற்கைகளே -பொழுது
புலர்வதுக்குள் எங்காவது ஓடி விடுங்கள்
கயவர் கையில் மாட்டினால்
நீங்களும் கற்பு இழந்ததுதான்
கதறி அழ நேரிடும்


பிறவி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக